📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 31, 2026 09:30 PM

நாளை தமிழகம் வருகிறார் ராகுல்

நாளை தமிழகம் வருகிறார் ராகுல்

நாளை தமிழகம் வரும் ராகுல் காந்தி, நீட்டால் உயிரிழ்ந்தோர் குடும்பத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.

இந்த முகாமில் முக்கியத் தலைவர்களின் உரைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் நாளை (1-ந்தேதி) நிறைவடைகிறது.

முகாமில் பங்கேற்பதற்காக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் வரும் அவர் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

நீட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தை சந்திக்கும் ராகுல்

அதை தொடர்ந்து கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மகாபலிபுரம் புறப்படுகிறார். தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக செல்லும் அவர் பகல் 11.30 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெறும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை சென்றடைகிறார்.

அங்கு மாவட்டத் தலைவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். பின்னர் ஒவ்வொரு மாவட்டத் தலைவரின் குடும்பத்தினருடனும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். மகாபலிபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

ராகுல்காந்தி செல்லும் வழிகளில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் கூடி விவாதிக்கப்பட்டது.

ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து வழிநெடுக பலத்த பாதுகாப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.