📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News October 07, 2026 09:03 AM

"நான் எங்கு இருக்கிறேன் என்றே காலையில் புரியவில்லை".. சதத்திற்குப் பின் கேப்டன் ஸ்ரேயாஸ் நெகிழ்ச்சி

"நான் எங்கு இருக்கிறேன் என்றே காலையில் புரியவில்லை".. சதத்திற்குப் பின் கேப்டன் ஸ்ரேயாஸ் நெகிழ்ச்சி

இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்து திரும்பி, நீண்ட பயணக் களைப்பால் நான் எங்கு இருக்கிறேன் என்றே காலையில் கண் விழித்தபோது புரியவில்லை. ஆனால் ஆடுகளத்திற்கு ஏற்ப என்னை விரைவில் மாற்றிக்கொண்டேன். சர்வதேச டி20 போட்டியில் சதம் அடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் எண்ணம் இன்று சாத்தியமாகியுள்ளது. உண்மையாகவே நாம் காணும் கனவுகள் ஒருநாள் நனவாகும் என்பதை உணர்கிறேன்.

பயணக் களைப்பை நாங்கள் எப்போதுமே ஒரு சாக்காகப் பயன்படுத்த மாட்டோம். வெஸ்ட் இண்டீஸ் மிகவும் அதிரடியான அணி என்பதால் எங்களது திட்டங்களை சரியாகச் செயல்படுத்தினோம். 'நமக்கு சாதகமான நாளாக அமையும் போது நாமே முன்னின்று போட்டியை முடிக்க வேண்டும்' என்பதுதான் எங்கள் அணுகுமுறை. அதை இன்று நான் செய்தேன். இதே பாணியில் விளையாடினால் உலகில் எவராலும் வீழ்த்த முடியாத அசுர பலம் கொண்ட டி20 அணியாக இந்தியா மாறும்.

அறிமுக வீரர் நமன் திர் பந்து சுழல்வதைப் புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக வீசினார். அவரது தைரியமான அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. தொடர் பயணத்தால் எனது கண்கள் மட்டுமின்றி அக்‌சர் படேலின் கண்களும் சிவந்து போயுள்ளன. இன்று இரவு நிம்மதியாக நீண்ட நேரம் தூங்கப் போகிறோம்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கலகலப்பாகத் தெரிவித்தார்.