'நாங்கள் வற்புறுத்தவில்லை'... தமிழ்த் தாய் வாழ்த்து குறித்து ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அரசு நிகழ்ச்சிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், "தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சிகளின் கடைசியில் தான் பாட வேண்டும் என நாங்கள் வெளியிட்ட அறிவிப்பாணையில் எந்த இடத்திலும் வற்புறுத்தவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து 'தேசிய கீதம்' பாடப்பட வேண்டும். நிகழ்வுகளின் தொடக்கம் மற்றும் நிறைவு பற்றிய தெளிவான வழிகாட்டுதல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
நாங்கள் வெளியிட்ட அறிவிப்பாணையில் முதலில் வந்தே மாதரமும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்றே குறிப்பிட்டிருந்தோம். தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சியின் இறுதியில் தான் பாட வேண்டும் என எங்கும் கட்டாயப்படுத்தவோ வற்புறுத்தவோ இல்லை என்று மத்திய அரசு தனது விளக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து தனித்தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமான அறிவித்தார்.