நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதி... இன்று தங்கம் விலை குறைந்தது
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததை தொடர்ந்து, இந்தியாவிலும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்ததுடன், கடந்த 21-ந்தேதி ரூ.92 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இதனால் தங்கம் விலை மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு நகை வாங்குவோர் மத்தியில் ஏற்பட்டது.
ஆனால், அதன்பிறகு தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த 23-ந்தேதி சவரனுக்கு ரூ.1,080-ம், 24-ந்தேதி ரூ.920-ம் அதிகரித்தது. இதற்கிடையே, கடந்த 25-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்தது. இதனால் ஒரு சவரன் ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 26-ந்தேதி சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. நேற்று (27-ந்தேதி) காலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், வார இறுதி நாளான இன்று (28-ந்தேதி) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.