📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 14, 2026 12:31 PM

நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்! தங்கம் விலை இன்று அதிரடி குறைவு !

நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்! தங்கம் விலை இன்று அதிரடி குறைவு !

நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்! தங்கம் விலை இன்று அதிரடி குறைவு !

தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. இதனால் நகை வாங்க திட்டமிடுபவர்கள் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

சவரனுக்கு ரூ.360 குறைவு :

இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

இதன்படி, இன்று ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் தங்கத்தின் விலையும் சரிவு :

தங்கத்தின் கிராம் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.360 குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை :

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அடுத்தடுத்த நாட்களில் ஏற்படும் மாற்றங்களை நகை வாங்குவோர் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.