நட்புக்கு மரியாதை.. அஜித்
சென்னை: அஜித்தும், விஜய்யும் சேர்ந்து ராஜாவின் பார்வையிலே என்ற ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார்கள். அதற்கு இருவருமே உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்து; இப்போது வெவ்வேறு பாதையில் பயணப்படுகிறார்கள். சூழல் இப்படி இருக்க லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடந்த கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அஜித்குமாரும், விஜய்யும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்குள் வந்து; இரண்டு பேருமே உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள். அவர்களுக்காக இரண்டு பேரின் ரசிகர்களும் போடாத சண்டையில்லை, பேசாத வார்த்தையில்லை. இருவரும் ராஜாவின் பார்வையிலே படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதற்கு பிறகு அவர்கள் இணையவே இல்லை. இப்போது விஜய் முதலமைச்சராகவும், அஜித் கார் ரேஸர் ப்ளஸ் நடிகராகவும் இருக்கிறார்கள்.
தொடங்கி வைத்த விஜய்: சூழல் இப்படி இருக்க லண்டன் சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடந்த கார் பந்தயத்தை அஜித் அழைப்பின் பேரில் விஜய் சென்று தொடங்கி வைத்தார். அவருடன் ஆதவ் அர்ஜூனா, திரிஷா உள்ளிட்டோரும் சென்றிருந்தார்கள். ரேஸை தொடங்கி வைப்பதற்கு முன்பு அஜித்தை பார்த்ததும் க்யூட்டாக ஓடி சென்று விஜய் கட்டியணைத்து முத்தம் கொடுத்த வீடியோ எல்லாம் சோஷியல் மிடீயாவில் பயங்கரமாக ட்ரெண்டாகின.
விஜய்யின் ஆசை: அதேபோல் தன் அருகில் இருந்த ஒருவரிடம், 'தலைவருடைய (அஜித்) ரேஸிங் சூட்டை பிடித்தபடி ஃபோட்டோ எடுக்க வேண்டும்' என ஆசையை வெளிப்படுத்தி அதன்படியே செய்தார். அதேபோல் ரேஸ் காரில் அஜித் அமர்ந்திருக்கும்போது அந்த காரில் அமர்ந்துகொண்டு போஸும் கொடுத்தார். அந்தப் புகைப்படங்களும் இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
வலுக்கும் கண்டனங்கள்: அவர்களது சந்திப்பு பெரும்பாலான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும்; ஒருதரப்பு ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட அப்செட் ஆகியிருக்கிறார்கள். அஜித்தை உருவ கேலி செய்ததோடு மட்டுமில்லாமல் தரக்குறைவாக ஏகேவையும் அவரது மனைவி ஷாலினியையும் விஜய் ரசிகர்கள் செய்தார்கள். விஜய்யேகூட ஏகேவை கிண்டல் செய்யும் உடல்மொழியில் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் ஏகே பக்கம்தான் நின்றோம். அப்படி செய்தவருடன் இவ்வளவு நெருக்கமாக இப்போது அஜித் நட்பு பாராட்டுவதை பார்க்க முடியவில்லை எனவும் புலம்புகிறார்கள்.
வெங்கட் பிரபு சொன்னது: இந்நிலையில் இரண்டு பேரையும் வைத்து படம் இயக்கிய வெங்கட் பிரபு இந்த சந்திப்பு குறித்து பேசுகையில், "இன்று இரண்டு பேரும் ஒன்றாக இருக்கிறார்கள்.லெனின் பான்டியன் பட ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் என்பதால் என்னால் லண்டன் செல்ல முடியவில்லை. இல்லை என்றால் அங்கே நானும் இருந்திருப்பேன். அஜித்தும், விஜய்யும் சேர்ந்திருப்பதை நான் நிறைய தடவை பார்த்துவிட்டேன். இது அப்பா நடித்த முதல் படம். எனவே இங்கே வந்தேன். இரண்டு பேரின் ரசிகர்களுக்கிடையே மோதல் இருந்தாலும் அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் அழகான நட்பு எப்போதுமே இருக்கும். இந்த சந்திப்பு நட்புக்கு கொடுத்த மரியாதையாகத்தான் பார்க்கிறேன்" என்றார்.