📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 07, 2026 04:32 PM

ஓய்வு அறிவித்தவுடன் அடித்த ஜாக்பாட்.. ஸ்டீவ் வாக் அணியில் இணையும் அஜின்கியா ரஹானே.. பின்னணி என்ன?

ஓய்வு அறிவித்தவுடன் அடித்த ஜாக்பாட்.. ஸ்டீவ் வாக் அணியில் இணையும் அஜின்கியா ரஹானே.. பின்னணி என்ன?

ஓய்வு அறிவித்தவுடன் அடித்த ஜாக்பாட்.. ஸ்டீவ் வாக் அணியில் இணையும் அஜின்கியா ரஹானே.. பின்னணி என்ன?

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த சில நாட்களிலேயே, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள முதலாவது ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 30 அன்று அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்த ரஹானே, தற்போது நெதர்லாந்தைச் சேர்ந்த 'ஆம்ஸ்டர்டாம் பிளேம்ஸ்' அணியின் நட்சத்திர வீரராக இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், ஆம்ஸ்டர்டாம் அணியின் இணை நிறுவனருமான ஸ்டீவ் வாக், ரஹானேவை நேரடியாகத் தொடர்பு கொண்டு தனது அணியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 38 வயதான நிலையில் ரஹானே ஓய்வை அறிவித்தார். அடுத்து அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த புதிய லீக் தொடர் வரும் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 20 வரை அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த புதிய பயணம் குறித்துப் பேசிய ரஹானே, "நான் ஓய்வு அறிவித்த அன்றே இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை உலகளவில் பகிர்ந்து கொள்ளவும், ஐரோப்பிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உதவவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்றார்.

ரஹானேவின் வருகை குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில், "ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் திறமை, விடாமுயற்சி, பணிவு மற்றும் தலைமைப் பண்பு என அனைத்தும் ரஹானேவிடம் உள்ளது. மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அவர் நடந்து கொள்ளும் விதம் உலகளவில் அவருக்குப் பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது" என்று பாராட்டி இருக்கிறார். இந்த தொடரின் இணை உரிமையாளரான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், "ரஹானே போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்த லீக் தொடரில் விளையாடுவது போட்டியின் தரத்தை உயர்த்துவதுடன், அடுத்த தலைமுறை ஐரோப்பிய கிரிக்கெட் வீரர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.