📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 12:04 AM

ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் 124 பேர் ஞானேஷ்குமாருக்கு ஆதரவு

ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் 124 பேர் ஞானேஷ்குமாருக்கு ஆதரவு

புதுடில்லி: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிக்கும், தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் எதிராக டில்லியில் இண்டி கூட்டணியினர், மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு முன்னாள் ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் 124 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; நாங்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. எந்தவித ஆதாரமும் இன்றி, மிண்டும் மீண்டும் தேர்தல் நடைமுறை மீது குற்றம்சாட்டப்படுகிறது. இது ஜனநாயக அமைப்புகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்து விடும்.

முறைகேடு நடக்கும் தேர்தல் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அந்த காலங்களில் நாங்கள் ஓட்டுச்சாவடியில் பணியாற்றியுள்ளோம். ஓட்டுச்சாவடியை கைப்பற்றுவது, கள்ள ஓட்டு போடுவது என்பது எல்லாம் 1990 காலகட்டத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது.

ஆனால், 2025ல் பீஹாரில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்திருப்பது தேர்தல் ஆணைய நிர்வாகத்தின் செயல்பாடுகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதை காட்டுகிறது. ஒரு மறு தேர்தலும் நடக்கவில்லை, 1951க்குப் பிறகு அதிகளவு ஓட்டுப்பதிவு, பெண்கள் அதிகளவில் போட்டியிட்டிருப்பதை நாம் பார்த்தோம்.

தற்போதைய தேர்தல் ஆணைய அமைப்பு முறை மிகவும் பாதுகாப்பானது., அதை யாராலும் எளிதில் துஷ்பிரயோகம் செய்ய முடியாது.

போராட்டம் நடத்தும் கட்சியினர், தாங்கள் வெற்றிபெற்ற போதும் இதே தேர்தல் முறைதான் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது, அதே அமைப்பிற்கு எதிராகத் தான் போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்களிடம் செல்வாக்கை நிலைநிறுத்தவே, இதுபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன, இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.