பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, பல்லடம், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை உயர்ந்துவிட்டது. மேலும், கால்நடை பராமரிப்புச் செலவு, தவிடு, புண்ணாக்கு, தீவனப் புல் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் பால் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ளார். இது கட்டுப்படியாகாது எனத் தெரிவித்து, கொள்முதல் விலையை கூடுதலாக உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் வழங்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் நிறுவனத்தின் கீழ் 800-க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.
பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வந்த பால் விநியோகத்தை நிறுத்திவிட்டு, உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூட்டுறவு சங்கங்களின் நுழைவாயிலை மறித்து, பால் கேன்களுடன் பால் வழங்காமல் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.