📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 30, 2026 02:33 PM

பார்லியில் விவாதத்தை தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி; ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

பார்லியில் விவாதத்தை தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி; ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

புதுடில்லி: பார்லியில் விவாதம் நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராகவே இருப்பதாகவும், விவாதங்களைத் தவிர்க்கவே எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 20ம் தேதி துவங்கிய பார்லியின் மழைக்கால கூட்டத் தொடரின் அலுவல் பணிகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 9வது நாளாக முடக்கி வருகின்றன. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருந்தும், எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே பார்லியை முடக்கி வருவதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜ்யசபாவில் அவர் மேலும் பேசியதாவது; கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, இரு அவைகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் முழு கவனம் செலுத்தி வருகிறது. அவர்கள் குற்றம்ச்சாட்டும் பிரச்னைகள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து, தங்களின் கோரிக்கைகளை மாற்றிக் கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கத் தயாராக உள்ளது. ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்தபோதெல்லாம், எதிர்க்கட்சிகளிடம் உண்மையான காரணங்கள் இல்லை. இருப்பினும், முறையான பதிலை அவர்கள் பெற்றனர்.

இன்றுகூட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர். எதிர்க்கட்சிகளின் இந்த நடத்தையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.