📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 23, 2026 09:03 AM

பெரம்பலூர்: நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!

பெரம்பலூர்: நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை!

Perambalur: Anti-corruption police conduct surprise raid at the municipal office!

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் கட்டிட வரைபட அனுமதி வீட்டு மனைக்கு புதிதாக வரி விதித்தல் போன்ற பல்வேறு இனங்களுக்காக அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்ததை தொடர்ந்து இன்று பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல உள்ளே இருக்கும் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், வெளியில் யாருக்கும் தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக நகராட்சி அலுவலக பணியாளர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு தனியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நிறைவடைந்த பிறகே பணம் அல்லது முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியவரும்.