📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health July 24, 2026 12:33 AM

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் - சமையல் கூடங்களுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியீடு

ஜூலை 27ஆம் தேதி வரை இணையதளத்தில் இருந்து டெண்டர் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது.

Published : July 23, 2026 at 6:30 PM IST

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்காக ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்களுக்கு டெண்டர் அறிவிப்பை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் இன்று (ஜூலை 23) வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 116 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்கள்) கோரி நகராட்சி நிர்வாக இயக்குநர் இன்று (ஜீலை 23) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவிப்பின்படி, 3 மாநகராட்சிகளில் உள்ள 3 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் மற்றும் 112 நகராட்சிகளில் உள்ள 113 ஒருங்கிணைக்கப்பட்ட சமையல் கூடங்கள் என மொத்தம் 116 சமையல் கூடங்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் பணிக்காக தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவு வழங்குவதில் தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், நகர அளவிலான பதிவு பெற்ற வாரியக் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகள், துவக்க நிறுவனங்கள் (Start-ups) மற்றும் நடைமுறையில் செயல்பட்டு வரும் பிற தகுதியான நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள் www.tntenders.gov.in⁠ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பின்படி, ஒரு பணியின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.37 லட்ச ரூபாய் ஆகும். மேலும், அதிகபட்ச பணியின் மதிப்பு 9.2 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27ஆம் தேதி வரை இணையதளத்தில் இருந்து டெண்டர் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகளை இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை ஒப்பந்தப்புள்ளி தொடர்பான பணிகள் நிறைவடைந்து, அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.