📅 Saturday, 26 September 2026 IST | புரட்டாசி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 10, 2026 03:03 PM

பல இரவுகளுக்கு பிறகு உன் வாழ்வில் சூரியன் உதித்துள்ளது.. உழைப்பை விட்டு விடாதே! சர்பராஸ் தந்தை அறிவுரை

பல இரவுகளுக்கு பிறகு உன் வாழ்வில் சூரியன் உதித்துள்ளது.. உழைப்பை விட்டு விடாதே! சர்பராஸ் தந்தை அறிவுரை

பல இரவுகளுக்கு பிறகு உன் வாழ்வில் சூரியன் உதித்துள்ளது.. உழைப்பை விட்டு விடாதே! சர்பராஸ் தந்தை அறிவுரை

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள வலது கை பேட்ஸ்மேன் சர்பராஸ் கானை ஊக்குவிக்கும் வகையில், அவரது தந்தை நௌஷாத் கான் நெகிழ்ச்சியான கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான சர்பராஸ் கான், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் கால் விரல் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக சர்பராஸ் கானை இந்திய தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 28 வயதான சர்பராஸ் கானை ஊக்குவிக்கும் வகையில் அவரது தந்தை நௌஷாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், "பல இரவுகளுக்குப் பிறகு சூரியன் உதித்திருக்கலாம், ஆனால் கடின உழைப்புக்கு எப்போதுமே அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்" நௌஷாத் கான், சர்பராஸ் கானின் தந்தை மட்டுமல்லாமல் அவரது பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மும்பையின் ஆசாத் மைதானத்தில் 'மேச்சோ கிரிக்கெட் கிளப்' என்ற கிரிக்கெட் அகாடமியையும் நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், சர்பராஸ் கான் கடைசியாக 2024 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்பராஸ், தனது இரண்டாவது இன்னிங்ஸில் 195 பந்துகளில் 150 ரன்கள் குவித்து தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இருப்பினும், அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. ஆறு இன்னிங்ஸ்களில் மொத்தமாக 171 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான் சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தொடா கணேஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சர்பராஸ் கான் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சர்பராஸ் கானுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டெஸ்ட் அணியில் இடம் பெற அவர் தகுதியானவர்" என்று பதிவிட்டுள்ளார்.

சர்பராஸ் கான் தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றடைந்துள்ளார். ஆகஸ்ட் 10 திங்கட்கிழமையன்று அவர் கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 சனிக்கிழமையன்று காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கவுள்ளது.