📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion September 27, 2026 03:04 PM

பள்ளிவாசலுக்கு வெளியே தீ மூட்டியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

பள்ளிவாசலுக்கு வெளியே தீ மூட்டியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள பள்ளிவாசலின் நுழைவாயிலில் உள்ளாடையை எரித்துத் தீயை மூட்டியதாக ஆடவர் ஒருவர்மீது சனிக்கிழமை அன்று (செப்டம்பர் 26) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மார்ட்டின் சீ ஹோக் லெங் என்ற அந்த ஆடவர் ஆபத்தான தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது. அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியது, இரண்டு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்நோக்குகிறார்.

ஜூன் 24ஆம் தேதி நொவினா தேவாலயத்தில் இருந்த ஒரு நபரை நோக்கி அவர் அவமதிக்கும் வார்த்தைகளைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அந்தச் சமயத்தில் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அந்த நபரிடம், ‘நீ ஓர் இந்து. உடனடியாக வெளியே போ’ என்று சீ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சீயை மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தின் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு அக்டோபர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சம்பவ நாளான வெள்ளிக்கிழமை அன்று (செப்டம்பர் 25) இரவு 8.05 மணியளவில் எண் 80 ராஃபிள்ஸ் பிளேசில் உள்ள யுஓபி பிளாசாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள மௌலானா முகமது அலி பள்ளிவாசலுக்கு வெளியே இந்தத் தீ மூட்டப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களில் ஒருவர் அந்தத் தீயை அணைத்ததாகக் காவல் துறையினர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்செயல்கள் மே மாதத்தில் நடந்தவை.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

செப்டம்பர் 16ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலையில் மாண்டரின் கேலரியில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடையில் $249 மதிப்புள்ள மூக்குக் கண்ணாடி சட்டத்தையும் மே 23 அன்று அராப் ஸ்திரீட்டில் உள்ள ஒரு கடையில் $15 மதிப்புள்ள வெள்ளி நெக்லசையும் சீ திருடியதாகக் கூறப்படுகிறது.