📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 11:30 AM

போலீஸ் ஸ்டேஷனில் கார்த்தியை அசிங்கப்படுத்திய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!

போலீஸ் ஸ்டேஷனில் கார்த்தியை அசிங்கப்படுத்திய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில், ரேவதியை சுட்ட ரவுடியை கார்த்தி கண்டுபிடித்து அடித்து உதைத்து, காவல் நிலையத்தில் ஆஜர்படுத்துகிறார். ரேவதியை சுட்டது இவன்தான் என்றும், அதை கண்ணால் பார்த்த சாட்சி நான்தான் என்றும் கார்த்திக் போலீசாரிடம் சொல்கிறார். அதுமட்டுமில்லாமல், இந்த சம்பவத்திற்கும் சாமுண்டீஸ்வரிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறுகிறார். இதைக் கேட்டதும் போலீசார் சாமுண்டீஸ்வரியை வெளியே அனுப்புகிறார்கள்.

கார்த்திகை தீபம்: அப்போது சாமுண்டீஸ்வரி, டேய் நடிக்காத... இது எல்லாமே உன்னோட வேலைதான். என்னையும் என் பொண்ணையும் பிரிக்கணும் என்பதற்காக இப்படி ஒரு டிராமா பண்ணியிருக்க. நீயே ஆள் அனுப்பி ரேவதியோட சுட வச்சிட்டு, கடைசியில் நீயே அவனை தேடி கண்டுபிடிச்சு என்னை காப்பாத்துற மாதிரி நாடகம் போட்டு என்னுடைய குடும்பத்தோடையும் சேர்ந்துக்கலாம்னு பாக்குறியா. ஒரு காலமும் அது நடக்கவே நடக்காது என்று கார்த்திக்கை கடுமையாக பேசுகிறார்.

கோவப்பட்ட கார்த்தி: இதை கேட்டு வருத்தப்படும் கார்த்திக், உங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியவே தெரியாதா? கொஞ்சம் கூட நீங்க எதையுமே புரிஞ்சுக்கவே மாட்டீங்களா? என்று வேதனையுடன் கேட்கிறார். உடனே மயில்வாகனம், சகலா, நீங்க அவங்ககிட்ட பேசுறதே வேஸ்ட். அவங்க நீங்க எது செஞ்சாலும் தப்பாகத்தான் நினைக்கிற ஆளுங்க. அவங்ககிட்ட போய் பேசுறதே தப்பு. சகலா, நீங்க அமைதியா இருங்க என்று கார்த்திக்கை சமாதானப்படுத்துகிறார்.

வருத்தப்பட்ட பரமேஸ்வரி: கார்த்தி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிளம்பி நேராக வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்ததும் பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். இதையெல்லாம் கேட்ட பரமேஸ்வரி பாட்டி, இந்த சாமுண்டீஸ்வரி என்னைக்குத்தான் மாறப்போறாளோ தெரியல. அவ கொஞ்சம் கூட மாறவே இல்லை. அவளோட பிடிவாதமும், ஆத்திரமும் தான் இந்த குடும்பத்துக்கு வினையா வந்து இருக்கு என்று வருத்தப்படுகிறார். மேலும், நீ போனதுல இருந்து ரேவதி சாப்பிடவே இல்ல என்று சொன்னதும், கார்த்திக் ரேவதியை பார்த்து அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். மறுநாள் காலை ரேவதியின் கையில் அடிபட்டு இருப்பதால் அவளுக்கு பெட் காபி கொடுத்து எழுப்புவதுடன், பல் விளக்கி விடுவது என கார்த்திக் ரேவதியை அக்கறையுடன் பார்த்துக்கொள்கிறார்.

சந்திராவின் அடுத்த பிளான்: இதற்கிடையில் கோயில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது கோயில் திருவிழாவில் காப்பு கட்ட வேண்டும் என்றும், அதற்கு ராஜராஜன் நிச்சயமாக வர வேண்டும் என்றும் ஊர் பெரியவர்கள் கார்த்திக்கிடம் சொல்கிறார்கள். இந்த விஷயம் சந்திரகலாவிற்கு தெரியவருகிறது. உடனே சாமுண்டீஸ்வரியிடம் "கும்பாபிஷேகத்திற்க காப்பு கட்ட போறாங்களாம். அதுல மாமா கண்டிப்பா கலந்துக்கணும். அதுக்கு மாமாவை நீ அனுப்பவே கூடாது என்று சொல்லி ஏற்றி விடுகிறார். அதோடு நிறுத்தாத சந்திரகலா, பஞ்சாயத்தை கூட்டி எனக்கும் இந்த கோவில்கும்பாபிஷேகத்திற்கும் எந்த சம்ந்தமும் இல்லை என மாமாவை சொல்ல சொல்லு, அப்படி மாமா சொன்ன ஊர்காரங்க ஆடிப்போய்டுவாங்க, ஏன்னா இந்த கார்த்தி சொல்லித்தான் கும்பாபிஷேக வேலை நடக்குது, அப்படி இருக்கும் போது மாமா இப்படி சொன்ன எல்லாம் கார்த்திக் மேலத்தான் கோவப்படுவாங்க என சொல்கிறாள். இத்தோடு இன்றைய எபிசோடு முடிவடைந்திருக்கிறது. அடுத்து என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்க.