📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 13, 2026 01:01 PM

போஸ்ட் ஆபிஸ் RD யில் மாதம் 6000 ரூபாய் சேமித்தால் 10 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும் ? முழு கணக்கீடு

போஸ்ட் ஆபிஸ் RD யில் மாதம் 6000 ரூபாய் சேமித்தால் 10 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும் ? முழு கணக்கீடு

நடுத்தர மக்கள் எந்த வித ரிஸ்க்கும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் சேமிக்கவே விரும்புவார்கள். எனவே தான் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபிஸ் போன்ற அரசு வழங்கும் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் என்பது மக்கள் விரும்பும் ஒரு சேமிப்பு திட்டமாகும். இதில் நாம் முதலீடு செய்யும் பணம் என்பது 100 % பாதுகாப்பாகவும் லாபம் தரும் வகையிலும் இருக்கும். மேலும் இதில் சேமிப்பதற்கு பெரிய தொகை அவசியமில்லை. நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு இதில் சேமித்தால் போதுமானது. அந்த வகையில் தினம் 200 ரூபாய் என மாதம் 6000 ரூபாய் சேமிப்பதினால் போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் நமக்கு எவ்வளவு கிடைக்கும் ? அதே அந்த திட்டத்தை பத்து வருடங்கள் நீட்டிப்பதினால் நமக்கு என்னென்னெ லாபம் இருக்கும் என்ற முழு கணக்கீட்டை தற்போது பார்க்கலாம்மாதம் 6000 ரூபாய் சேமிப்பு கணக்கீடுதினம் முதலீடு -200 ரூபாய்மாதாந்திர முதலீடு -6000 ரூபாய்5 ஆண்டு மொத்த முதலீடு -3 .6 லட்சம்கிடைக்கும் வட்டி -68 ஆயிரம்5 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் மொத்த முதிர்வு தொகை -4.28 லட்சம்நீங்கள் மாதம் 6000 ரூபாயை தொடர்ந்து 5 ஆண்டுகள் சேமித்து வந்தால் நாம் செய்த மொத்த முதலீடு 3 .6 லட்சமாகும். மேலும் 68 ஆயிரம் வட்டியுடன் சேர்த்தால் நம்முடைய மொத்த முதிர்வு தொகை 4.28 லட்சமாகும்இந்நிலையில் இந்த போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தை நாம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க விரும்பினால் நாம் நீட்டித்து கொள்ளலாம்10 ஆண்டு காலம் கணக்கீடுமாதாந்திர சேமிப்பு -6000 ரூபாய்10 ஆண்டுகள் மொத்த முதலீடு -7.2 லட்சம்நமக்கு கிடைக்கும் வட்டி லாபம் -கிட்டத்தட்ட 3 லட்சம்10 ஆண்டுகளில் மொத்த முதிர்வு தொகை -10.2 லட்சம்போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் நாம் பத்து ஆண்டுகள் சேமிப்பதினால் நமக்கு கூட்டு வட்டியின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எனவே தான் முதல் 5 ஆண்டுகள் நமக்கு கிடைக்கும் வட்டி 68 ஆயிரம் ரூபாயாக இருக்கும் நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சம் வரை வட்டி லாபம் கிடைக்கின்றது. அதற்கு ஒரே காரணம் கூட்டு வட்டியின் வளர்ச்சி தான்