PPF கணக்கு விவகாரம் :12 ஆண்டுகளுக்கு பின் கணக்கு தவறு என அறிவிப்பு : வட்டி கிடைக்குமா ?: நீதிமன்றம் தீர்ப்பு
ஏராளமானோர் தபால் நிலைய பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund - PPF) மூலம் சேமித்து வருகின்றனர். சிறு சேமிப்பாளர்கள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், மூத்த குடிமக்கள் என பலர் இத்திட்டத்தில் சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்து வருபவர்களுக்கு தற்போது ஒரு நிவாரண செய்தி கிடைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். அதாவது அவ்வப்போது பழைய நிர்வாக தவறுகளை சுட்டிக்காட்டி அஞ்சலகங்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் PPF கணக்கை செல்லாது என கூறிவிட்டால் என்னவாகும் ? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. அதுபோல சில சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் தற்போது நடந்துள்ளதுவழக்கு பின்னணிவழக்கு தொடர்ந்தவர் தனது மக்களின் திருமணத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு PPF கணக்கை துவங்கியிருக்கின்றார். அவர் தொடர்ந்து 12 ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளர். ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு HUF பெயரில் புது கணக்கு துவங்கும் வீதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக கூறி இந்த கணக்கு தவறு என்றார்கள் அஞ்சலகத்தை சேர்ந்தவர்கள். கணக்கிற்கு வட்டி தர முடியாது என கூறி கணக்கை மூடுவதாக தெரிவிக்கப்பட்டதுநீதிமன்றம் தீர்ப்புவிதிமுறை தெரியாமல் அவர் கணக்கு துவங்கினாலும் கூட கடந்த 12 ஆண்டுகளாக தபால் துறை அதை தடுக்கவில்லை. பணம் கட்டும்போது தட்டி கேட்காமல் விட்டுவிட்டு தற்போது வட்டி தர முடியாது என சொல்லக்கூடாது. மேலும் முதலீட்டாளர் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் அவருக்கு 12 ஆண்டுகளுக்கான முழு வட்டியையும் கணக்கிட்டு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளதுPPF முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதுகணக்கு ஏன் செல்லாது என்ற காரணத்தை ஆராய வேண்டும்.ஒரே நபர் இரண்டு கணக்குகளை வைத்திருந்தாலோ, வரம்பிற்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது UF/மைனர் தொடர்பான கணக்கு பிரச்சனையா என்பதை ஆராய வேண்டும்தவறு அஞ்சலகம் அல்லது வங்கி ஊழியர்களால் நடந்திருந்தால் இந்த நீதிமன்ற தீர்ப்பை நாம் சுட்டிக்காட்டலாம்முறையாக மேல்முறையீடு செய்யலாம்ஆண்டிற்கு 1.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யும் பணத்திற்கு வட்டி கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்