பட்ஜெட் கூட்டத் தொடர்.... ஸ்பெஷல் கிளாஸ் செல்லும் விஜய்...
பட்ஜெட் கூட்டத் தொடர்.... ஸ்பெஷல் கிளாஸ் செல்லும் விஜய்...
பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்குவது எப்படி என்று முதலமைச்சர் விஜய் தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் இரண்டு மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ் சென்று கொண்டு இருக்கின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியதாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரசியல் வட்டாரத்தில் யாரும் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தின. திமுக, அதிமுக உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகளின் கணிப்புகளை முறியடித்து, புதிதாக உருவான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து கட்சித் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து த.வெ.க. அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி, முதலமைச்சர் விஜயின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதங்களும், அரசியல் விமர்சனங்களும் அரங்கேறின.
கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மின்வெட்டு, தொழில்துறை முதலீடுகள், விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி அரசை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், இந்த பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதை விட முந்தைய திமுக ஆட்சியை குறை கூறுவதே முதலமைச்சரின் நன்றியுரையின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.
இதையடுத்து ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், “த.வெ.க. அரசு மக்களின் வாக்குகளால் உருவானது; எந்தக் கட்சியின் தயவாலும் அல்ல. மக்கள் பணத்தை தொடமாட்டோம், தொடவிடவும் மாட்டோம். மாநில உரிமைகளில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம். தமிழகத்தின் வளர்ச்சியே எங்கள் அரசின் முதன்மை இலக்கு. ஊழல் மற்றும் 'பார்ட்டி பண்ட்' அரசியலுக்கு எங்கள் ஆட்சியில் இடமில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், முந்தைய ஆட்சியில் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் பல்வேறு துறைகளில் நிதி வசூல் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், அதற்கான ஆதாரங்களை அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியிடுவோம் என்றும் அறிவித்தார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதுடன், தங்களுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். அதற்கு பதிலளிக்க 'பாயிண்ட் ஆஃப் ஆர்டர்' கேட்டும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. சட்டப்பேரவையை சினிமா படப்பிடிப்பு தளமாக மாற்றிவிட்டார்கள். முதலமைச்சர் முழுவதும் ஸ்கிரிப்ட்டை வாசித்தார். அவரது பேச்சில் இன்று 10 ரீல்ஸ் தேறும். விரைவில் சட்டப்பேரவையிலேயே 'ஆக்ஷன், கட்' சொல்லும் நிலை வந்துவிடும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், மின் வெட்டு, பயிர்க் கடன், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் வெறும் டயலாக்கை மட்டுமே பேசி வருகின்றார். அதை தவிர்த்து எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு ஒழுங்கான பதிலை அளிக்காமல் வசனங்களை மட்டுமே அள்ளி விடுகிறார் என்று அனைவரும் மத்தியிலும் விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், த.வெ.க. அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், அமைச்சர்களின் விளக்கங்கள், முதலமைச்சரின் பதிலுரை உள்ளிட்டவை அடுத்த மாத இறுதி வரை நடைபெற உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டும் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பட்ஜெட் விவாதத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து எவ்வாறு ஆலோசிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
அதேநேரத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விரிவாகவும், துல்லியமாகவும் பதிலளிக்க வேண்டியிருப்பதால், முதலமைச்சர் விஜய்க்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தினமும் சிறப்பு பயிற்சி (Special Class) அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தினமும் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த பயிற்சியில் சட்டப்பேரவை நடைமுறைகள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம், நிர்வாகத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கப்படுவதாகவும், முதலமைச்சர் பொறுமையாக அமர்ந்து அவற்றைக் கேட்டு தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.