📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 20, 2026 02:02 AM

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

எல்.முருகன்

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் எத்தனையோ இடங்கள் உள்ளபோது, பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? மீன்பிடித் தொழிலை நம்பி அப்பகுதியில் ஏராளமான மீனவர்கள் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.

இத்திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மீனவர் நலனை கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

நவோதயா பள்ளி அவசியம்: தற்போது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ, மெட்ரிக் கல்வித் தரத்தில் படிக்கமுடியும் என்ற நிலை உள்ளது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம். நவோதயா பள்ளிகள் அமைந்தால், ஏழை மாணவர்களுக்கும் அதுபோன்ற தரமான கல்வி கிடைக்கும். தாய்மொழி வழிக்கல்வியைதான் புதிய தேசியக்கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்தியஊரக வளர்ச்சி, தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பங்கேற்று, இளைஞர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.