📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 03, 2026 01:32 PM

பும்ரா காயம், கடவுளே தந்த வாய்ப்பு.. 29 வயது வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

பும்ரா காயம், கடவுளே தந்த வாய்ப்பு.. 29 வயது வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

பும்ரா காயம், கடவுளே தந்த வாய்ப்பு.. 29 வயது வீரர் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 முதல் காலே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால், முழங்கால் காயம் காரணமாக அவர் தற்போது இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இது குறித்துப் பேசிய ஆகாஷ் சோப்ரா, "ஆகிப் நபியின் பெயர் தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் முதல்தர கிரிக்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் மட்டும் அவர் 60 முதல்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஐபிஎல் போட்டிகளைப் பற்றி தற்காலிகமாக மறந்துவிடுங்கள், ஏனெனில் இது சிவப்பு பந்து தொடர், அவர் டெஸ்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே ஆகிப் நபி தானாகவே அணிக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். இரண்டாவது பெயரைப் பற்றி யோசிக்கும் போது, எனக்கு அன்ஷுல் கம்போஜின் நினைவு வருகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அவர் அறிமுகமானார்.

இதுவரை அவர் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முதல்தர கிரிக்கெட் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அவர் எவ்வளவு சிறந்த பந்து வீச்சாளர் என்பது புரியும். தற்போதைய ஃபார்ம் மற்றும் ரிதமின் அடிப்படையில் 'அன்ஷுல் கம்போஜ் பரிசீலிக்கப்பட வேண்டும்.

எனவே, ஆகிப் நபி முதலிடத்திலும், அன்ஷுல் கம்போஜ் இரண்டாவது இடத்திலும் இருக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார். இது கடவுளே வழங்கிய வாய்ப்பாக தாம் கருதுவதாக ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். எனினும் இந்திய அணியில் ஏற்கனவே சிராஜ், குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, ஆகியோர் உள்ளனர். இதனால் 4வது வீரராக வேர்க்கப்பட்டுள்ள ஆகிப் நபிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது ன்பது சிரமம் தான்.