📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion October 11, 2026 03:04 AM

புரட்டாசி மகாளய அமாவாசை திருமூர்த்திமலையில் வழிபாடு

புரட்டாசி மகாளய அமாவாசை திருமூர்த்திமலையில் வழிபாடு

உடுமலை: உடுமலை, திருமூர்த்திமலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் புனித நீராடி மும்மூர்த்திகளை வழிபட்டனர்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாத மகாளய அமாவாசையான நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் புனித நீராடியும், தோணியாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், மும்மூர்த்திகளை வழிபட்டனர். சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, விவசாயிகள் பாரம்பரிய முறையில், மாடு மற்றும் குதிரை வண்டிகளிலும் வந்தனர்.