📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 21, 2026 07:02 PM

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உயிரிழந்தார்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உயிரிழந்தார்.. மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

சென்னை: பழம் பெரும் நடிகை சௌகார் ஜானகி சற்று முன் காலமானார். அவருக்கு வயது 94. சௌகார் ஜானகி இந்தியத் திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் மூத்த கலைஞர்களில் ஒருவராவார். இவர் ஏழு தசாப்தங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகை சௌகார் ஜானகி: சங்கரமாஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 193ஆம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி பிறந்தார். இவர் தனது 14வது வயதிலேயே 'மகிசாசுர மர்த்தினி' என்கிற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். ஜானகி 1950 ஆம் ஆண்டு சௌகார் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்த அன்றில் இருந்து இவரை ரசிகர்கள் சௌகார் ஜானகி என்று அழைத்து வருகின்றனர். கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் வளையாபதி என்கிற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பல வெற்றிப்படங்கள்: புதிய பறவை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லு முல்லு என தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் ஏராளமான மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏழு தலைமுறைகளுக்கும் மேலான தமது கலைப்பயணத்தில், ஜானகி ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, தமது தொடக்க காலத்தில் வானொலிக் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இரண்டு நந்தி விருதுகள், கலைமாமணி விருது, இந்தியாவின் நான்காவது உயரிய விருதுதான பத்மஸ்ரீ ஆகியவிருதுகளை பெற்றுள்ளார். இவர் கடைசிய சந்தானம் நடித்த பிஸ்கோத் என்ற படத்தில் நடித்திருந்தார்.

உயிரிழந்தார்: வயது மூப்பு காரணமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த இவருக்கு சில தினங்கள் முன் உடல்நலம் பாதிக்கப்பட்டதுர. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் அழ்த்தி உள்ளது. பழம் பெரும் நடிகையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.