Tamil Nadu
September 24, 2026 12:04 PM
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை: ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க சட்டத்திருத்தம் கோரிய மனுவையும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவையும் ஐகோர்ட் மறுத்துள்ளதுடன், ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடுவதால் இடைத்தேர்தலுக்கு தடை வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் மட்டுமே சட்டத்தை இயற்ற முடியும் என்று தலைமை நீதிபதி அமர்வு, வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu