📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 07, 2026 05:34 PM

ரீ

ரீ

சென்னை: கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று பாடகியும் ஹீலருமான கெனிஷா. நடிகர் ரவி மோகனுடன் நெருக்கமாக இருப்பதாக வெளியான தகவல்கள், அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள், சமூக வலைதள விமர்சனங்கள், உணர்ச்சிப்பூர்வமான பதிவுகள் என தொடர்ச்சியாக கவனத்தை ஈர்த்த அவர், ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன் பிறகு கெனிஷா தரப்பில் எந்தவிதமான பெரிய அப்டேட்டும் வெளியாகாத நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிரப்பட்டுள்ள புதிய பதிவு மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

"It's been a little while..." என்று தொடங்கும் அந்த பதிவில், கடந்த சில நாட்களாக தனக்கு ஆதரவாக செய்தி அனுப்பியவர்கள், பிரார்த்தனை செய்தவர்கள், அன்பு காட்டியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த உலகத்தில் இன்னும் அன்பும், கருணையும் இருக்கிறது என்பதை நீங்கள் எனக்கு நினைவூட்டினீர்கள். நான் இப்போது அமைதியான மனதுடனும், ஆழமான நோக்கத்துடனும் மீண்டும் வருகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "Music. Healing. Art. Spirit. Love." என்ற ஐந்து வார்த்தைகளை குறிப்பிட்டு, "Tomorrow, we begin again. Odi Odi" என்று பதிவை நிறைவு செய்திருப்பது ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த "Odi Odi" என்பது புதிய பாடலா, இசை ஆல்பமா அல்லது புதிய கலைப் பயணத்தின் தொடக்கமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ரவி மோகன் தொடர்பான சர்ச்சைகளால் கெனிஷா தொடர்ந்து இணையத்தில் விமர்சனங்களை சந்தித்தார். தன்னைப் பற்றி பரவிய குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்ததோடு, "நான் யாருடைய குடும்பத்தையும் பிரித்தவர் இல்லை" என்றும் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், தொடர்ச்சியான ஆன்லைன் ட்ரோலிங் காரணமாக சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்புக்கு பிறகு, ரவி மோகனுடனான அவரது உறவு குறித்தும் பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இருவரும் பிரிந்துவிட்டதாகவும், கெனிஷா சென்னை நகரை விட்டு விலகியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து இருவரும் தொடர்ந்து விரிவான விளக்கம் எதையும் அளிக்கவில்லை.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, அவர் மீண்டும் தனது இசை மற்றும் ஹீலிங் பயணத்தில் கவனம் செலுத்தப் போகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. குறிப்பாக "நாளை மீண்டும் தொடங்குகிறோம்" என்ற அவரது வரிகள், விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் என்பதற்கான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.

இதுவரை அந்த பதிவுக்கு அடுத்ததாக ஓம் நமச்சிவாயா.. நாளை ரிலீஸ் என குறிப்பிடப்பட்ட, கெனிஷா பாடல் பாடும் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது இந்த ஒரே இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.