📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics May 21, 2026 09:48 AM

“தமிழ்த் தேசியத்தை விற்பனை செய்த முதலாளிதான் சீமான்!”

“தமிழ்த் தேசியத்தை விற்பனை செய்த முதலாளிதான் சீமான்!”

“தமிழ்த் தேசியத்தை விற்பனை செய்த முதலாளிதான் சீமான்!” - சொல்கிறார் இலங்கை தமிழ் எம்.பி

“திராவிட, தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஈழத்துக்காக பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்திருக்கின்றன. இந்த நிலையில், நீங்கள் விஜய்யை திடீரென ரட்சகராக முன்னிறுத்துவது விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறதே?”

“விஜய்யை, நான் மட்டும் முன்னிறுத்தவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே எம்.ஜி.ஆரையும் தாண்டி அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறார் விஜய். அதனால் ஒரு நம்பிக்கை அவர்மீது உருவாகியிருக்கிறது. இதற்கு முன்பு இருந்தவர்களைப்போல் இல்லாமல், விஜய் அண்ணா ஈழ விஷயத்தை நடுநிலைமையோடு அணுக வேண்டும் என நான் விரும்புகிறேன்.”

“தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு நடுநிலைமையை விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறீர்களா?”

“நான் வழக்கமான யாழ்ப்பாண அரசியல்வாதியாக இருந்திருந்தால், ‘விஜய், எங்களுக்குத் தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தர வேண்டும்’ என்று சொல்லியிருப்பேன். ஆனால், அவர் இப்போது அது பற்றியெல்லாம் பேச வேண்டாம். நிதானமான நேரத்தில் அது குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஈழ இனப்படுகொலையின் மீதான சர்வதேச விசாரணைக்கு என்றைக்காவது ஒரு நாளைக்குத் தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.”

“ஆனால், நீங்களேதான் ‘கச்சத்தீவையும் யாழ்ப்பாணத்தையும்கூட விஜய்யிடம் கொடுக்க வேண்டும்’ எனப் பேசியிருக்கிறீர்களே?”

“உணர்ச்சிக்கும் வலிக்கும் வித்தியாசம் இருக்கிறது. சீமான் பாவிப்பது எங்களுடைய உணர்ச்சியை; நாங்கள் கதறுவது எங்களுடைய வலியை. ‘கச்சத்தீவைக் கொடுங்கள், யாழ்ப்பாணத்தையும் கொடுங்கள்’ என்பது எங்களுடைய வலி. கச்சத்தீவுக்குப் பக்கத்தில், நெடுந்தீவு என்ற ஒரு தீவு இருக்கிறது. அங்கே 30 நாள்களில், மூன்று நாள்கள் மட்டுமே மின்சாரம் இருக்கும். 3,000 மக்களுக்கு இரண்டு வைத்தியர்கள் வீதம்தான் இருக்கிறார்கள். இது போன்ற விஷயங்கள் உருவாக்கும் வலியால் அப்படிப் பேசுகிறேன். மாற்றம் வர வேண்டும் என்பதற்காகப் பேசுகிறேன்.”

“விளம்பரம், கவன ஈர்ப்புக்காகத்தான் இப்படிப் பேசுகிறீர்கள் என்கிறார்களே?”

“அண்ணன் விஜய், அரசியலுக்கு வந்தபோதும் இப்படியெல்லாம் அவதூறு முன்வைக்கப்பட்டது. அவதூறு இல்லாமல் அரசியல் இல்லை. ஒரு வைத்தியராக 12 வருடங்கள் பணியாற்றிய எனக்கு, இந்த அரசியல், அதைவிடப் பெரிய வருமானத்தைத் தரப் போவதில்லை. நானும் என்னுடைய சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தது கவன ஈர்ப்புக்காக இல்லை. அந்த விமர்சனங்களை நான் கடந்துபோகவே விரும்புகிறேன். ஆரம்பத்தில் இலங்கையில் சகல அரசியல்வாதிகளுக்கும் நான் செல்லப்பிள்ளை. அவர்களை நான் ஆதரிப்பேன் என்று அனைவரும் நினைத்தார்கள். நானே நேரடியாக அரசியலுக்கு வந்ததால், எனக்கு எதிராகத் திரும்பி இப்படிப் பேசுகிறார்கள்.”

“சுயேச்சையாக வெற்றிபெற்றவர் நீங்கள். உங்களை ஆதரித்தவர்கள் பலரே இப்போது உங்களை எதிர்க்கிறார்கள். அதனால் விஜய் ரசிகர்களின் வாக்குகளைக் குறிவைத்து அவரைப் பாராட்டிப் பேசுகிறீர்களா?”

“சீமானை ஆதரிப்பவர்கள்தான் என்மீது இப்படியொரு விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். நான் சீமானை விமர்சிப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. தமிழ்த் தேசியத்தை விற்பனை செய்த முதலாளிதான் சீமான்.”

“சீமான் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், 2008-09 காலகட்டத்தில் ஈழப்பிரச்னையைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்ததில் சீமானுக்கு முக்கியப் பங்கு இருக்கிறதே?”

“ `பிரபாகரனை, தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே நான்தான்’ என்றும், `ஆமைக்கறி, ஏ.கே.47’ போன்ற பிக்காளித்தனமான அவரின் கருத்துகளையும்தான் நான் வெறுக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வராக சீமான் வந்தால், யாழ்ப்பாண மக்களின் பிரச்னைகள் தீரும் என புலம்பெயர் தமிழர்கள் நம்புகிறார்கள். அந்த அளவுக்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை.”

“இரு நாட்டு மீனவர் பிரச்னைகளுக்காக ஒரு எம்.பி-யாக நீங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாமே?”

“தமிழக மீனவர்கள், இலங்கையில் கடல் தாண்டி வருகின்றபோது அவர்களைச் சிறைப்பிடிப்பது நாங்கள் இல்லை; சிறைப்பிடிப்பது மத்திய அரசாங்கம். ஆனால், தமிழக மீனவர்கள் எங்களுடைய கரை வரைக்கும் வந்து மீன் பிடிக்கிறார்கள் என்பதுதான் எங்களுடைய யாழ்ப்பாணத்து மக்களின் வலி. இந்த விஷயத்தில் நாங்கள் உணர்வுபூர்வமாகவும், அரசியல்ரீதியாகவும் சிந்திக்க வேண்டும். இந்திய அரசாங்கத்திடமோ, இலங்கை அரசாங்கத்திடமோ போய் நிற்காமல், அண்ணன், தம்பியாக நாமே இந்தப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்.”

“நீங்கள், நமல் ராஜபக்சேவின் ஆள் என்றும் சொல்லப்படுகிறதே?”

“என்னுடைய தந்தைக்கு எதிரி மகிந்த ராஜபக்சே. அவருடைய மகன்தான் நமல். அதற்காக, பாராளுமன்றத்தில் அவருடன் பேசாமல் இருக்க முடியுமா... அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; எதிரியும் இல்லை. அதையும் தாண்டி, நான் அவரிடம் எதிரிபோல நடந்துகொண்டால், அவர் ஆட்சிக்கு வரும்போது அந்தக் கோபம் என் மக்களின் மீது திரும்பும்!”