ஸ்டாலின் பேச்சு பற்றி தேர்தல் கமிஷனில் புகார் தருவோம்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
கோவை: தவெக வேட்பாளர், பட்டியலின பெண் குறித்து ஸ்டாலின் மோசமாக பேசி இருக்கிறார்; ஸ்டாலின் பேச்சு பற்றி தேர்தல் கமிஷனில் புகார் தருவோம் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: ஸ்டாலின் தன்னுடைய உண்மையான முகத்தை நேற்று பிரசாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார். தந்தையும், மகனும் தனது மனதில் இருப்பது மற்றும் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெறப்போவது கிடையாது; எல்லா தேர்தலிலும் தோல்வி தான்.
ஸ்டாலின் பேச்சு பற்றி தேர்தல் கமிஷனில் புகார் தருவோம். விரக்தியில் பேசி வருகின்றனர். சமூகத்துக்கு திமுகவினர் கேடு விளைவிக்கின்றனர். இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டிய நபர்கள். ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தவெக வேட்பாளர், பட்டியலின பெண் குறித்து ஸ்டாலின் மோசமாக பேசி இருக்கிறார். தரம் தாழ்ந்து ஸ்டாலின் பேச துவங்கி இருக்கிறார்.
தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்றால் சண்மூகம் நிரூபிக்க வேண்டும். எஸ்ஐஆர்க்கு எதிராக தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இபிஎஸ்க்கு இனி எப்பொழுதும் வெற்றி கிடைக்காது. திமுக, அதிமுக, பாஜ இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலை வரும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
சத்தியத்திற்கு துரோகம் செய்த த.வெ.க., வேட்பாளர் சத்யபாமாவை, பெட்டி பாமா, பல்டி பாமா என, அழைக்கின்றனர்; எப்படி தான் அந்த உருவத்தை வைத்து பல்டி அடித்தார்கள் என்று தான் தெரியவில்லை. என தாராபுரத்தில், தி.மு.க., வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, ஸ்டாலின் பேசி இருந்தார். இதற்கு தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.