📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 05, 2026 01:03 AM

டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் சஸ்பெண்ட்

டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் சஸ்பெண்ட்

டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளின் இதர செலவுகளை அரசே ஏற்கும், கூடுதல் தொகை வாங்கக்கூடாது என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்திருந்த நிலையில், கூடுதல் தொகை வசூலித்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பல இடங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலித்த புகாரில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சஸ்பெண்ட் ஆனதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2,000 டாஸ்மாக் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால், சஸ்பெண்ட் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது. ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும், இல்லை என்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என 2,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது டாஸ்மாக் நிர்வாகம்.