Tamil Nadu Top 5 News : இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top 5 News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Top 10 Headlines Today : "இன்றைய (ஜூலை 27,2026) முக்கிய டாப் 10 செய்திகள் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்."
1. கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
காவிரி நீர், மேகதாது விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதல்வர் விஜய், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத்தும் அதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், முதல்வர் விஜயின் கர்நாடக மாநில பயணம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது பயணத் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
2. இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் செல்ல பக்தர்களுக்கு தடை.!
Tiruvannamalai Idukku Pillayar Temple: திருவண்ணாமலையில் இடுக்கு பிள்ளையாரை தரிசனம் செய்ய சென்ற போது உடல் பருமன் காரணமாக கோவில் இடுக்கிலிருந்து சிக்கி வெளியே வர முடியாமல் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
3. என்ன சாதி.. “நீ செத்தால் சாவு” போலீஸின் கொடூர வார்த்தையால் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் - நடந்தது என்ன?
கடலூர்: குடும்ப பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு பெட்ரோல் ஊற்றி இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சாதியின் பெயரை குறிப்பிட்டு புகார் எடுக்க முடியாது என காவல் நிலையத்தில் தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
4. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை? சென்னையில் மழை? - இன்றைய வானிலை அறிக்கை
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வரும் 30 ஆம் தேதி கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (27-07-2026) வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-07-2026 மற்றும் 29-07-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
5. அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த நினைக்கின்றனர்... அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எதற்காக?
திருச்சி: மாணவர்களின் உணர்வுகளையும், அவர்களின் போராட்டத்தையும் தமிழக அரசு முழுமையாக மதிக்கிறது. ஆனால் சிலர் இந்த போராட்டத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி, முதல்வருக்கு எதிரான போராட்டமாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் நிர்வாகப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு, மாணவர் போராட்டம், பழநி நில விவகாரம் மற்றும் திருச்சி மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
6. ஆரோவில் - தாய்லாந்து இடையே மலர்ந்த புதிய பந்தம்... விரைவில் மாபெரும் உணவுத் திருவிழா!
ஆரோவில் மற்றும் தாய்லாந்து நாட்டிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறப்புமிக்க கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி ஆரோவில்லில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆரோவில்லில் உள்ள ‘சினிமா பாரடைசோ’ திரையரங்கில் தாய்லாந்து நாட்டின் செழுமையான பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலைநயமிக்க உணவு முறைகளை விளக்கும் பிரத்யேக ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாய்லாந்து நாட்டின் கான்சல் ஜெனரல் திரு. ராச்சா அரிபார்க், துணை கான்சல் ஜெனரல் திருமதி. போர்ன்புன் புபியாஞ்சாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். உள்ளூர் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் ஆரோவில் வாழ் சர்வதேச மக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இதில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த வெற்றிகரமான கலாச்சார பரிமாற்றத்தின் தொடர்ச்சியாக, ஆரோவில் செயற்குழு மற்றும் தாய்லாந்து தூதரகம் இணைந்து விரைவில் ஒரு பிரம்மாண்டமான ‘உணவு மற்றும் கலாச்சாரத் திருவிழாவை’ ஆரோவில்லில் நடத்த முடிவு செய்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி