📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 25, 2026 03:33 PM

டெல்லி: டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குதல் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள

டெல்லி: டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குதல் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள

டெல்லி: டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குதல் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, காயமடைந்த மாணவருடன் இணைந்து ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் மாணவரின் உடலில் உள்ள காயங்களைச் சுட்டிக்காட்டிச் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி. போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது.

அந்த குண்டுகளை பயன்படுத்தவில்லை என ஒன்றிய அரசு பொய் கூறுகிறது. மாணவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். கல்வி முறையின் சீர்குலைவுக்கு பிரதான் தான் காரணம். போலீசாரின் தாக்குதலில் இளைஞரின் கண் பார்வை பறிபோகியுள்ளது. இதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இளைஞர்களின் எதிர்காலம் மீது ஒன்றிய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே மாணவர்கள் கோரிக்கையாக உள்ளது. மாணவர்களை தாக்கியவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மாணவர்களை அடிப்பதையும், மிரட்டுவதையும் நிறுத்தி அவர்கள் மீதான தடியடிக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.