📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 13, 2026 01:37 PM

டெல்லியில் இன்று முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை

டெல்லியில் இன்று முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் அணி பலப்பரீட்சை

புதுடெல்லி: இந்​தி​யா, ஆப்​கானிஸ்​தான் அணி​கள் மோதும் முதலா​வது சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்டி டெல்லியில் இன்று நடை​பெறவுள்​ளது.

ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி டி20 தொடரில் விளை​யாட​ இந்தியா வந்துள்ளது. இதில் முதலா​வது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது.

இந்​திய அணி பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்​மா, கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர், விக்​கெட் கீப்​பர் இஷான் கிஷன், திலக் வர்​மா, நிதிஷ் குமார் ரெட்​டி, ஷிவம் துபே, இளம்​புயல் வைபவ் சூர்​ய​வன்ஷி என வலு​வான வரிசையைக் கொண்​டுள்​ளது.

அதே​போல் பந்​து​வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங், அக்​சர் படேல், வருண் சக்​ர​வர்த்​தி, ரவி பிஷ்னோய் ஆகியோர் அடங்​கிய கூட்​டணி ஆப்​கானிஸ்​தான் பேட்​டிங் வரிசையை அசைத்​துப் பார்க்​கும் திறன் கொண்​ட​தாக உள்​ளது.

அதே​நேரத்​தில் ஆப்​கானிஸ்​தான் அணி இப்​ராஹிம் ஸத்​ரன் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. பேட்​டிங்​கில் ஆப்​கானிஸ்​தான் வீரர் தர்​விஷ் ரசூலி, நூர் உல் ரஹ்​மான், ரஹ்​மானுல்லா குர்​பாஸ், செடிகுல்லா அடல், அஸ்​மத்​துல்லா ஓமர்​ஸாய் ஆகியோர் எதிரணி பந்​து​வீச்​சாளர்​களை விளாசக் காத்​திருக்​கின்​றனர்.

பந்​து​வீச்​சில் ரஷித் கான், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்​மான் ஆகியோர் அடங்​கிய சுழற்​பந்​து​வீச்​சுக் கூட்​டணி இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு சோதனை அளிக்​கக்​கூடும். அதே​போல் வேகப்​பந்து வீச்​சிலும் பஸல்​ஹக் பரூக்​கி, நவீன் உல் ஹக் ஆகியோ​ரும் எதிரணி பேட்​ஸ்​மேன்​களை மிரட்​டக் காத்​திருக்​கின்​றனர்.

இந்​தி​யா: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்​டன்), சஞ்சு சாம்​சன், அபிஷேக் சர்​மா, இஷான் கிஷன், திலக் வர்​மா, நிதிஷ் குமார் ரெட்​டி,

ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர், அக்​சர் படேல், ஜஸ்​பிரீத் பும்​ரா, அர்​ஷ்தீப் சிங், வைபவ் சூர்​ய​வன்​ஷி, யாஷ் தாக்​குர், வருண் சக்​ர​வர்த்​தி, ரவி பிஷ்னோய்.

ஆப்​கானிஸ்​தான்: இப்​ராஹிம் ஸத்​ரன் (கேப்​டன்), தார்​விஷ் ரசூலி, நூர் உல் ரஹ்​மான், ரஹ்​மானுல்லா குர்​பாஸ் (விக்​கெட் கீப்​பர்), செடிக்​குல்லா அடல், அஸ்​மத்​துல்லா ஓமர்​சாய், ரஷித் கான், முகமது நபி, குல்​ப​தீன் நயீப், நாங்​கெலியா கரோட்​டே, அப்​துல்லா அகமதுஸாய், பஸல்​ஹக்​ பரூக்​கி, நவீன்​ உல்​ ஹக்​, முஜீப்​ உர்​ ரஹ்​மான்​, நூர்​ அகமது.