📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 25, 2026 07:04 AM

டெங்கு குறித்து பாடம் எடுக்க வேண்டாம்: பழனிசாமிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

டெங்கு குறித்து பாடம் எடுக்க வேண்டாம்: பழனிசாமிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

சென்னை: ‘தமிழகத்​தில் கொசு ஒழிப்​புப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. டெங்கு குறித்து எங்​களுக்கு பாடம் எடுக்க வேண்​டாம்’ என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் பதில் அளித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டெங்கு காய்ச்​சலை ‘மர்ம காய்ச்​சல்’ என்று மறைத்​தவர்​கள், இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வரு​கிறார்​கள்.

தமிழகத்​தில் டெங்கு பாதிப்​பு​கள் குறித்து அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்​திருக்​கிறார் முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி. டெங்கு காய்ச்​சல் விவரங்​கள் அனைத்​தும் இந்த அரசே அதி​காரப்​பூர்​வ​மாக நாள்​தோறும் வெளி​யிட்டு வரும் தகவல்​கள்​தான்.

மறைக்​காமல் வெளி​யிடு​வ​தால்​தான் அவரால் அவற்றை மேற்​கோள் காட்​டவே முடிகிறது. ஆனால், இதே பழனி​சாமி ஆட்​சி​யில் டெங்கு பாதிப்பை மறைத்​து, மர்ம காய்ச்​சல் என்று பெயர் சூட்டி மக்​களின் உயிரோடு விளை​யாடி​னார்.

அதனால்​தான் அவரது அப்​போதைய அரசு டெங்கு அரசு என்று மக்​களால் அழைக்​கப்​பட்​டது. நோயைக் கண்​டறிவது குற்​றமல்ல. மறைப்​பது​தான் குற்​றம்.

பழனி​சாமி தன் அறிக்​கை​யில் ‘செய்ய வேண்​டும்’ என்று பட்​டியலிட்​டுள்ள ஒவ்​வொரு பணி​களும் ஒரு மாதத்​துக்கு முன்பே தொடங்​கப்​பட்டு தற்​போது தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.