📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 15, 2026 07:03 PM

'தாமரை இலை மேல் தண்ணீர் போல...'

'தாமரை இலை மேல் தண்ணீர் போல...'

'தாமரை இலை மேல் தண்ணீர் போல...' - பட்டும் படாமல் SIR போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக?

தவெகவின் தொண்டர்களையோ கொடியையோ கூட்டத்தில் காணவே முடியவில்லை. மேடையில் பெயருக்கு இரண்டு பேரை கொடியை பிடிக்க வைத்து நிற்க வைத்தார்கள், அவ்வளவுதான்.

சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் SIR க்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராட்டம் நடத்தியிருந்தனர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியினரோடு ஆளுங்கட்சியான தவெகவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது. ஆனால், மற்ற கட்சியினரை போல தீவிரமாக இல்லாமல் மேம்போக்காக 'தாமரை இலை மேல் தண்ணீராக...' தவெக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சி, மாணவ அமைப்புகள், இந்தியா கூட்டணி கட்சியினர் என பல தரப்பினரும் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராடி கைதாகியிருக்கின்றனர்.

அதேநேரத்தில் காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் தவெக இந்த விவகாரத்தில் மேலோட்டமாகவே பேசியிருந்தது. `தேர்தலுக்கு முன்பாக என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்' எனப் பேசினர் ஒழிய, ஞானேஷ் குமார் பற்றி எதுவும் பேசவில்லை இதனால் தவெக மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.