📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 05, 2026 11:02 PM

தேர்தல் ஆணையர் விவகாரம்: ``விரிவாக விசாரிக்க உள்ளோம்"

தேர்தல் ஆணையர் விவகாரம்: ``விரிவாக விசாரிக்க உள்ளோம்"

இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக, அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார் எனக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அமித் ஷாவின் நிழலாக இருந்து பல்வேறு மாநிலத் தேர்தல்களில் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், புதிய வாக்காளர்களை இணைக்கும் படிவம் 6-ல் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் விவாதமானது.

இந்த நிலையில், 'தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் ஆணைய அமைப்பின் அரசியலமைப்பு அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தினாரா?' என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.