📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 31, 2026 10:33 AM

“தி.க. வாகனப் பரப்புரை பயணத்துக்கு கடைசி நிமிடத்தில் அரசு அனுமதி மறுத்தது ஏன்?”

“தி.க. வாகனப் பரப்புரை பயணத்துக்கு கடைசி நிமிடத்தில் அரசு அனுமதி மறுத்தது ஏன்?”

திமுக தலைவர் ஸ்டாலின்

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நீட் எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு பாஜக அரசைவிட தவெக அரசுதான் அதிகம் மிரளுகிறது.

தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் எனச் சொந்தம் கொண்டாடும் தவெக அரசு, பெரியார் திடலிலேயே போலிஸாரைக் குவித்திருப்பது ஏன்?

திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்துக்குக் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம்? யாரின் அழுத்தத்துக்குப் பணிந்து இதைச் செய்கிறார்கள்?

கடந்த காலங்களில் மிக அமைதியான முறையில், அறவழியில், கண்ணியத்தோடு இதே போராட்டங்களைத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் கட்டுப்பாட்டுடன் நடத்திக் காட்டியிருக்கிறது. அத்தகைய இயக்கத்தின் பரப்புரைப் பயணத்தைத் தடை செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. அடக்குமுறை அரசியலைக் கைவிட்டு, வீரமணியின் பரப்புரைப் பயணத்துக்கு உரிய அனுமதியைத் தவெக அரசு வழங்கிட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.