தீபாவளி ஆஃபர் சேல்ஸ் 2026 :அமேசான்
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் ஆன்லைன் விற்பனைகள் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பண்டிகை காலங்களில் ஆஃபர் போடுவார்கள் என்பதால் தான் அந்த ஆஃபரில் பொருட்கள் வாங்க மக்கள் கடந்த சில மாதங்களாக காத்துகொண்டு இருந்தனர்.டிவி, போன், லேப்டாப் போன்ற பொருட்களை மக்கள் இந்த பண்டிகை காலங்களில் ஆன்லைனில் வாங்கினால் பணத்தை மிச்சம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். எனவே தான் பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்க துவங்கியிருக்கின்றனர். ஆனால் இதுபோல ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது அதனை எப்படி வாங்க வேண்டும் ? ஒரே தொகையில் முழு பணத்தையும் செலுத்தி பொருட்களை வாங்குவதா ? EMI வழியே வாங்குவதா ?கிரெடிட் கார்டு மூலம் வாங்கலாமா ? என்ற குழப்பம் வாடிக்கையாளர்களிடம் உண்டு.விளம்பரங்களில் பல ஆப்ஷன்கள் இருந்தாலும் தவறான முறையை நாம் ஆராயாமல் தேர்வு செய்தால் நஷ்டம் ஏற்படுவது நமக்கு தான். எனவே பணம் செலுத்தும் முறையில் எது லாபம் என்பதை பார்த்து அந்த வழியே பணம் செலுத்துவது தான் நல்ல முடிவாக இருக்கும்முழு தொகையையும் ஒரே தவணையில் செலுத்துதல்நாம் ஒரு பொருளை முழு தொகை கொடுத்து ஒரே தவணையில் செலுத்தி வாங்கினால் அதற்கு எந்த செயலாக்க கட்டணமும் இல்லை. எதிர்கால தவணைகள் பற்றிய கவலையும் இல்லை.ஆனால் ஒரே நேரத்தில் முழு தொகையையும் செலுத்தினால் அவசர கால நிதி சேர்ப்பில் பாதிப்பு ஏற்படலாம்.கிரெடிட் கார்டு (no cost emi )ஒரே நேரத்தில் முழு தொகையையும் நாம் செலுத்த தேவையில்லை. பட்ஜெட்டில் அழுத்தம் ஏற்படாதுநோ காஸ்ட் என்பது முற்றிலும் இலவசம் இல்லை.வங்கிகள் செயலாக்க கட்டணங்களை வசூலிக்கின்றன. 18 % GST காரணமாக வங்கி தள்ளுபடி நன்மைகள் குறையலாம்.கிரெடிட் கார்டு வரம்பும் முடக்கப்படும்நுகர்வோர் கடன் (Consumer Durable Loan )உங்களிடம் கிரெடிட் கார்டு இல்லையென்றாலும் ஆதார் மற்றும் பான் கார்டு மூலம் 0 % முன்பணத்தில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம்ஆவணக்கட்டணம், செயலாக்க கட்டணம் போன்ற கட்டணங்களால் உங்களிடம் 1500 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படும். ஒரு தவணை தவறினாலும் அபராதம் விதிக்கப்படும்சிறந்த தேர்வு எது ?உங்களிடம் நீங்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்க முழு பணமும் கையில் இருந்தால் ஒரே தவணையாக அந்த தொகையை கொடுத்து பொருளை வாங்குவது நல்ல தேர்வாக இருக்கும்ஒருவேளை உங்களுக்கு அவசியமான பொருள் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்து கையில் முழு பணமும் இல்லையென்றால் 3 முதல் 6 மாத கால நோ காஸ்ட் emi ஐ தேர்வு செய்யலாம். நீண்ட கால emi ஐ தவிர்க்கலாம்.ஏனென்றால் நீண்ட கால emi யில் வட்டி அதிகம்