📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 12:34 PM

 தீவிர சிகிச்சையில் கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு

 தீவிர சிகிச்சையில் கொளத்துார் எம்.எல்.ஏ., பாபு

சென்னை: சென்னை கொளத்துார் தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., பாபு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் சளி அடைப்பு இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்துறை மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பில் எம்.எல்.ஏ., பாபு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைப்பு தருகிறது. உடல்நிலை முன்னேற்றத்தை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.