📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 10:34 PM

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு குறித்து உரிமைக்குழு விசாரணைக்கு பின் நடவடிக்கை: சபாநாயகர் அறிவிப்பு

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு குறித்து உரிமைக்குழு விசாரணைக்கு பின் நடவடிக்கை: சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேச்சு குறித்து உரிமைக்குழு விசாரணைக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறி உள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (ஆக.7) நடைபெற்றது. இந்த விவாதத்தில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போது அமைச்சர் நிர்மல் குமார் குறுக்கிட்டார். அப்போது பேசிய அவர், வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதை பற்றி பேச வேண்டாம். அது போக, மேலும் ஒரு விஷயம். திமுக எம்எல்ஏ இந்த அவை குறித்தும், முதல்வர் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். அது குறித்தும், அவை குறித்தும், முதல்வர் குறித்தும் தேவையற்ற பேச்சுகளை பேசியதால் இந்த அவை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

அதன் பின்னர், அமைச்சர் ஆதவ் பேசுகையில், திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதை தொடர்ந்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது;

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் வெளியில் பேசிய பேச்சு அவையின் மாண்பை குறைப்பதாகவும், அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் ஒரு கடிதத்தை கொடுத்து இருக்கிறார். மார்க்கண்டேயன் இங்கு சிறப்பாக பேசினார். வெளியில் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய வன்முறை பேச்சை பார்த்திருப்பீர்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர், பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசியதை அப்படியே படித்து காண்பித்தார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை அமைதிப்படுத்திய சபாநாயகர் தொடர்ந்து பேசினார்.

அப்போது கூறுகையில், ' வழக்கு நிலுவையில் உள்ளது. அதற்குள் போக விரும்பவில்லை. நீங்கள் அவர் பேசியது நியாயம் என்று வாதிடுவீர்கள் ஆனால், இரண்டு விதமான நடவடிக்கை என் முன்னால் இருக்கிறது. அவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முடிவை கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது உரிமைக்குழுவுக்கு அனுப்பலாம். முறையான விசாரணை நடத்தப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டு அதற்கு பின்னாலே என்ன செய்யலாம் என்ற முடிவோடு அமர்ந்திருக்கிறேன்.

மார்க்கண்டேயன் பிரச்னை பற்றி அவையில் எழுப்பி இருக்கின்ற காரணத்தினாலே, அவை உரிமைக்குழு இப்போதைக்கு இல்லை. அவை உரிமைக்குழு அமைக்கப்படட்டும். அப்படி அமைக்கப்பட்ட பிறகு,. அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டு, இந்த பிரச்னையை நான் அவையின் உரிமைக்குழுவுக்கு அனுப்பி விடுகிறேன்.

இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசினார்.