திருப்பரங்குன்றம் விவகாரம் இடதுசாரிகள் இன்று பேரணி
திருப்பரங்குன்றம் விவகாரம் இடதுசாரிகள் இன்று பேரணி
சென்னை, நவ. 28: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி தமிழகம் முழுவதும் இன்று மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணியை இடதுசாரி கட்சிகள் நடத்துகிறது.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டாக இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மத நல்லிணக்கத்திற்கும், அரசியல் சாசன நெறிகளுக்கும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் விரோதமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் போற்றத்தக்க மாண்புகளை பாதுகாக்க தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் இன்று பேரணி நடைபெறுகிறது என அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.