திருவள்ளூரில் அதிர்ச்சி: அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் பலி
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் உயிரிழந்தனர்.
வாயுக்கசிவு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாளர்கள் பலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்நிலையில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. அந்த குழு இந்த வாயு கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.