📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion July 29, 2026 10:33 PM

திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் முகப்பில் தடுப்பு வேலி

திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் முகப்பில் தடுப்பு வேலி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோவில் களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் கோவில் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அருணாச லேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவி லில் குகை போன்ற வாசல் உள்ளது. இந்த குகை போன்ற வாசலில் பின்புறத்தில் இருந்து உள்ளே நுழைந்து முன்பக் கம் வழியாக வந்து வழிபாடு செய்வார்கள்.

கடந்த 24-ந்தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திராவை சேர்ந்த சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்தபோது குகை போன்ற வாசலில் உள்ளே நுழைந்து உள்ளார். இதில் சிக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பு நேற்று முன்தினம் கிரிவலம் வந்த ஆந்தி ராவை சேர்ந்த பெண் ஒருவர் சிக்கியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அடுத்தடுத்த சம்பவங்களால் பக்தர்களிைேடய பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் இடுக்கு பிள்ளையார் கோவிலில் அறிவிப்பு பலகை நேற்று வைக்கப்பட்டது.

அதில், இடுக்கு பிள்ளையார் கோவிலின் வாயில் மிக குறுகலாக உள்ளதால் உடல்பருமன் உள்ளவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளின் முகப்பு பகுதியில் இரண்டு கம்பிகள் வைத்து வெல்டிங் செய்யப்பட்டு உள்ளது. அந்த இருகம்பிகள் வழியாக உள்ளே செல்ல முடிந்த பக்தர்கள் மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோவில் குகை போன்ற வாசல் வழியாக செல்ல கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.