📅 Thursday, 06 August 2026 IST | ஆடி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 06, 2026 09:30 AM

தமிழ் மீது தனுஷுக்கு இவ்வளவு ஆர்வமா?.. இப்படி போட்டு பொளந்துட்டாரே ப்பா.. அசுரன் வேற லெவல்

தமிழ் மீது தனுஷுக்கு இவ்வளவு ஆர்வமா?.. இப்படி போட்டு பொளந்துட்டாரே ப்பா.. அசுரன் வேற லெவல்

சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஓம் திரைப்படம் வரவிருக்கிறது. அதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். சாய் பல்லவி, மம்மூட்டி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இதற்கிடையே தான் படித்த தாய் சத்யா பள்ளிக்கு 3 மாடி கட்டடத்தை கட்டி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவருக்குள் இருந்த தமிழ் ஆர்வம் வெளிப்பட்டது. அந்தப் பேச்சு பலரிடம் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை. கடைசி ஐந்து படங்களில் அவர் இயக்கத்தில் உருவான இட்லி கடை மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை கொடுத்தது. அதுவும் விமர்சன ரீதியாக கடுமையான சேதாரத்தையே சந்தித்தது. குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவரது திரைக்கதையும், கதையும் இருந்ததாக கழுவி கழுவி ஊற்றினார்கள். இருப்பினும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய படங்களை ஒப்பிடுகையில் இட்லி கடை வணிக ரீதியாக கொஞ்சம் நிம்மதியைத்தான் கொடுத்திருக்கும்.

அடுத்த படம்: அவரது நடிப்பில் அடுத்ததாக ஓம் திரைப்படம் வரவிருக்கிறது. இதனை அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரிய்சாமி இயக்கியிருக்கிரார். அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகிறது. 15ஆம் தேதி ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிறது. ரஜினியின் படத்தை மீறி ஓம் வெற்றியடையுமா என்ற சந்தேகம் இருந்தாலும்; அமரன் படத்தின் இயக்குநர் என்பதால் இந்தப் படத்தின் D ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். மேலும் இதில் மம்மூட்டி, சாய் பல்லவி என பவர் ஃபெர்ஃபார்மர்கள் குவிந்திருப்பது படத்துக்கு பலமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

என்ன கதை?: ஏற்கனவே ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. இதுவும் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி ஆந்திரா காடுகளில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ்ர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் முருகன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்திலும், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். வரிசையாக லைன் அப்புகளை வைத்து மிரட்டலாக வலம் வருகிறார் அவர்.

பள்ளிக்கு கட்டடம்: சூழல் இப்படி இருக்க சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் இருக்கும் தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு மூன்று மாடி கான்கிரீட் கட்டடத்தை கட்டிக்கொடுத்திருக்கிறார் தனுஷ். அவர் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். அந்த கட்டடத்துக்கு தனுஷ் பிளாக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவோ உயரத்துக்கு சென்ற பிறகும் தான் படித்த பள்ளியை மறக்காத தனுஷின் குணத்தை அனைவருமே பாராட்டிவருகிறார்கள். அதேசமயம் அரசியலுக்கு வருவதற்கான அடிகளை அவர் எடுத்து வைக்க தொடங்கிவிட்டார் என்ற கருத்தும் எழாமல் இல்லை.

தனுஷ் பேச்சு: எது எப்படியோ இந்த ஆரோக்கியமான விஷயத்தை பாராட்டித்தான் ஆக வேண்டும். இந்நிலையில் கட்டட திறப்பு விழாவில் பேசிய தனுஷ், "நாங்கள் எல்லாம் படிக்கும் காலத்தில் தவறு தவறாக ஆங்கிலத்தில் பேசுவோம். ஆனால் டஹ்மிழ் நன்றாக தெரியும். இப்போதோ, பத்து பேரில் எட்டு பேருக்கு தமிழ் எழுத படிக்கவே தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தை பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். ரொம்ப வருத்தமான விஷயம் அது. உங்கள் தாய்மொழிதான் உங்களுக்கு முதலில் தெரிய வேண்டும். அதை எழுத படிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ் வரவில்லை என்று சொல்வது பெருமை இல்லை. அது ஒரு அவமானம்" என்றார்.