📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 05, 2026 04:03 PM

தமிழ் பையன் தினேஷ் கார்த்திக் இருக்கும் போது, வேறு நபர் எதுக்கு? CSK கோட்ச் குறித்து ஹைடன் கருத்து

தமிழ் பையன் தினேஷ் கார்த்திக் இருக்கும் போது, வேறு நபர் எதுக்கு? CSK கோட்ச் குறித்து ஹைடன் கருத்து

தமிழ் பையன் தினேஷ் கார்த்திக் இருக்கும் போது, வேறு நபர் எதுக்கு? CSK கோட்ச் குறித்து ஹைடன் கருத்து

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு, ஆர்சிபி அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளரும் ஆலோசகருமான தினேஷ் கார்த்திக்கை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹைடன் பரிந்துரைத்துள்ளார். தினேஷ் கார்த்திக் உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர் என்பதோடு மட்டுமல்லாமல், அவரது தமிழ் பின்னணி சிஎஸ்கேக்கு நன்மையாக இருக்கும் என்றும் ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் தமிழக அணியை வழிநடத்திய அனுபவம் கொண்ட தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணியின் பட்டம் வென்ற தொடர்களில் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.

விஸ்டன் கிரிக்கெட் பாட்காஸ்டில் பேசிய மேத்யூ ஹெய்டன், "சிஎஸ்கே அணிக்கு தினேஷ் கார்த்திக் ஒரு மிகச் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஆண்டி பிளவர் போன்ற உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமான விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையைக் கண்டுள்ளார்.

"குறிப்பாக, அவர் ஒரு உள்ளூர் தமிழ்நாட்டுப் பையன் என்பது மிக முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். இது கட்டாயம் என்று சொல்ல முடியாது, ஆனால் சிஎஸ்கே அணிக்கு எப்போதும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவு இருந்துள்ளது. எனவே, சிஎஸ்கே நிர்வாகம் ஒரு உள்ளூர் அடையாளத்தைக் கொண்ட நபரை பயிற்சியாளராகத் தேர்ந்தெடுப்பது அடுத்த கட்டத்திற்குச் செல்ல மிகச் சிறந்த வழியாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

"சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் எம்.எஸ். தோனி இன்னும் முக்கியப் பங்காற்றி வருகிறார். எனவே, புதிய பயிற்சியாளர் அவரோடு நல்ல இணக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். தோனியுடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியுள்ளதால் தினேஷ் கார்த்திக்கிற்கு இது எளிதாக இருக்கும்."

மேலும் பேசிய ஹெய்டன், குஜராத் டைட்டன்ஸ் போன்ற அணிகள் உள்ளூர் தமிழ் வீரர்களைத் தங்கள் அணியில் சேர்த்துள்ள வேளையில், சிஎஸ்கே பொதுவாக தமிழ்நாட்டிற்கு வெளியில் இருந்து வீரர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஐபிஎல் தொடரில் உள்ளூர் வீரர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு மொழி ரீதியாகவும், இளம் வீரர்களுடன் தொடர்பு கொள்ளவும் ஒரு பாலமாக இருப்பார்கள் என்பதால், உள்ளூர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பங்களிப்பு அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் ஹெய்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.