Tamil Nadu
July 28, 2026 03:30 AM
தமிழ் புலிகள் 33 பேர் கைது
ராமநாதபுரம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினர் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்முருகன், பரமக்குடி சட்டசபை செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். ரயில் நிலைய ஆர்ச் பகுதியில் இருந்து ஊர்வலமாக ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.
அப்போது ராமேஸ்வரம்--மதுரை பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்ததால் அதை மறிக்க முயன்றனர். போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 8 பெண்கள் உட்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu