📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 27, 2026 09:31 PM

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி

இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published : May 27, 2026 at 8:14 PM IST

புதுடெல்லி: தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பணத்தை பறிக்கொடுத்து தமிழகத்தில் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை இயற்றியது. இதை எதிர்த்து, இந்த வகை விளையாட்டுகளை அளித்துவரும் பல்வேறு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தன.

மாநில அரசுகளுக்கு ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யும் அதிகாரம் இல்லை என தங்களின் வாதத்தை விளையாட்டு நிறுவனங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்த ஆனைலைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

அதேபோன்று கர்நாடகா அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்தையும் அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக, கர்நாடக அரசுகள் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை, கர்நாடகா உயர் நீதிமன்றங்களின் தடை உத்தரவு தவறானது என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கட்டாயம்: இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அதேபோன்று இணைய வழி விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து தனியார் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

கடந்த 2023இல் வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், இத்தகைய ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவை வணிகச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை எனக் கருதப்படுவதால், அத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு எந்தவொரு அடிப்படை உரிமையையும் விளையாட்டு நிறுவனங்கள் கோர முடியாது. எனவே இணைய வழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பு செல்லும்" என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர்.