தமிழக அரசு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
தமிழக அரசு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
அரசாணை எண் 41
புதிய நிபந்தனை
சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்டும் உள்நோக்கம்
தமிழகத்தில் 80 விழுக்காடு சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள்
தமிழகத்தில் உள்ள ரத்தப்பரிசோதனை நிலையங்களில் 80 விழுக்காடு பரிசோதனை நிலையங்கள் சிறிய ரத்தப்பரிசோதனை நிலையங்களாகும். இந்த சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூலமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை - எளிய மக்கள் அவர்களுடைய ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின், ரத்த வகைகள் மற்றும் இதர ரத்தப் பரிசோதனைகளை தங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே குறைந்த கட்டணத்தில் எளிதாக செய்து கொள்கின்றனர்.
அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களையும், அவற்றை நடத்துகின்ற லேப் டெக்னீசியன்கள் மற்றும் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தையும் காத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.