தமிழக காங்கிரசுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள்
வட்டார, நகர, பேரூர் தலைவர்களை பொறுத்தவரை சுமார் ஆயிரம் பேர் பொறுப்புக்கு வருவார்கள். புதிய ரத்தம் பாய்ச்சும் போது கட்சி வளர்ச்சி அடையும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேரடியாக தேர்வு செய்தது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 77 மாவட்ட தலைவர்களுக்கும் 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை மகாபலிபுரத்தில் நடக்கிறது. முகாம் நடைபெறும் 10 நாட்களில் ஏதாவது ஒரு நாள் ராகுல் காந்தியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
புதிய நிர்வாகிகள்
அதே நேரம் மாநில நிர்வாகிகள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் மாநில நிர்வாகிகள் நியமித்து சுமார் 8 வருடங்கள் ஆகி விட்டது. எனவே மாநில நிர்வாகிகளையும் விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.