Tamil Nadu
June 07, 2026 04:00 PM
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீண்டகாலமாக சீர்கெட்டு உள்ளது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இவர் சென்னை அம்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வைகோ பேச்சு
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நீண்டகாலமாக சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்ற நாங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றதை ஒருமணிநேரம் பட்டியலிடம் முடியும். அதில் ஒன்றைக்கூட உச்சரிக்க யாருக்கும் மனம் கிடையாது. அதற்காக எங்கள் மீது கடுமையான சொற்களை வீசுகின்றனர். அதைப்பற்றி எங்களுக்கு கவலை கிடையாது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். அண்ணாமலையும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார் அவ்வளவுதான்’ என்றார்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 4 இடங்களில் போட்டியிட்ட மதிமுக 2 இடங்களில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu