தமிழகத்தில் முதல்முறை வாக்காளர்களை சேர்க்க அக்.,10ல் சிறப்பு முகாம்
தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை:
எஸ்ஐஆர் முடிந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம்/ முதல்முறை வாக்காளர்களை, சேர்க்க நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அவர்களில், தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய, அக்டோபர் 10 ல் சிறப்பு முகாம், நடக்கும்.
வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறம் மற்றும் பெருநகரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் (Electoral Literacy Clubs) சேவை பயன்படுத்தப்படும். இதற்காக அக்டோபர் 7, 8, 9 தேதிகளில் சிறப்பு நடவடிக்கை நடத்தப்படும்.
ஊடகங்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகள் வாயிலாக விளம்பரம் செய்யப்படும். வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள். இளம் வாக்காளர்கள் இதனை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
புதுச்சேரியில் எஸ்ஐஆர் சரிபார்ப்பு பணி
புதுச்சேரியில் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் சரிபார்க்கும் பணி நடக்கும் என அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். தகுதி இருந்தும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்கும் எனக்கூறினார்.