📅 Saturday, 19 September 2026 IST | புரட்டாசி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 19, 2026 05:31 PM

தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா?

தமிழகத்தில் தொடரும் கொலைகளை தடுக்காமல் இருக்கும் வக்கற்ற அரசு, நீதி கேட்டால் ஒடுக்குவதா?

சட்டம் ஒழுங்கு சீரழிவு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது. நீதி கேட்டு போராடியவர்களையும் இந்த அரசு ஒடுக்குகிறது என்று கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.

தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதலமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?

போராடினால் ஒடுக்குவதா?

தமிழ்நாட்டில் தினமும் தொடரும் கொலைகளைத் தடுக்க வக்கற்ற தவெக அரசு, கொலைகளுக்கு நீதி கேட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் போராடினால் அவர்களை ஒடுக்கி கைது செய்வது கண்டனத்திற்குரியது.

நேற்றைய தினம் மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு உரிய நீதி கேட்டுப் போராடியவர்களைக் கடுமையாகத் தாக்கிக் கைது செய்துள்ளது. இன்று சிவகங்கையில் இரட்டைக் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும் தாக்குதல் நடத்திக் கைது செய்திருக்கிறது.

குற்றவாளிகளை ஒடுக்கச் சொன்னால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறதா இந்தத் திறனற்ற அரசு?

என்று தெரிவித்துள்ளார்.