📅 Friday, 16 October 2026 IST | புரட்டாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 16, 2026 07:04 AM

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சற்று நேரத்தில் சந்திக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சற்று நேரத்தில் சந்திக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சற்று நேரத்தில் சந்திக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, அதிமுக சட்டமன்றக் கொறடா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி சற்று நேரத்தில் நேரில் சந்திக்கவுள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் தொடர்பாக ஆளுநரிடம் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் விலகுவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, ஆளுநரிடம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி புகார் மனு அளிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதத்தில், அதிமுகவைச் சேர்ந்த கே. மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யாபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அவர்கள் மீதும், தவெக அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்த விவகாரத்திலும், சிபிஐ (CBI) விசாரணை கோரி ஏற்கனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரிடம் முறையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.